Blog

 • ஃபேர்போன் 2 'உலகின் முதல் மாடுலர் ஸ்மார்ட்போன்' அறிமுகம்
  Posted in: Uncategorized

  ஃபேர்போன் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனான ஃபேர்போன் 2 என்ற ‘உலகின் முதல் மாடுலர் ஸ்மார்ட்போனை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் EUR 529.38 (சுமார் ரூ.38,000) விலையில் டிசம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போனை மிகவும் எளிதாக பிரித்தல் /ஒன்று கூடுதல் ஆகியவை செய்யலாம். மேலும் நிறுவனம், மிக குறிப்பாக இந்த கைபேசி ஐரோப்பாவில் மட்டுமே பயன்படுத்தவும் மற்றும் சேவைகளுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது. ஃபேர்போன் நிறுவனம், அதன் புதிய ஃபேர்போன் 2 […]

 • வாலிபரின் கழுத்தை அறுத்தவருக்கு வலை
  Posted in: Uncategorized

  சென்னை: மயிலாப்பூர், லஸ் காவாங்கரை கபாலி தோட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (26) என்பவருக்கும், கோயில் திருவிழா தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், அதே பகுதி கெனால் பங்க் சாலை வழியாக, சென்று கொண்டிருந்த சீனிவாசனின் கழுத்தை கார்த்திக் அறுத்து விட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த சீனிவாசனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள மயிலாப்பூர் போலீசார், கார்த்திக்கை தேடி வருகின்றனர். தாக்குதலுக்கு பின்னணியில் […]

 • வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு
  Posted in: Uncategorized

  மும்பை: வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்ந்து 26128 புள்ளிகளாக உள்ளது. நிப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 7942 புள்ளிகளாக …       

 • பொட்டு சுரேஷ் கொலை வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு
  Posted in: Uncategorized

  மதுரை: மதுரையில், போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் கூறியதாவது: திமுக மாநில செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் கடந்த 2013ல் கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு சில ஆவணங்களை தயாரிக்க வேண்டி உள்ளது. இதற்காக தனியாக ஒரு இன்ஸ்பெக்டரை நியமிக்க முடியாது. எனவே, இவ்வழக்கு சிபிசிஐடியிடம் …       

 • புதுச்சேரியில் ஒரு தலை காதல் விவகாரத்தில் பள்ளி மாணவி கடத்தல்
  Posted in: Uncategorized

  புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு தலை காதல் விவகாரத்தில் பள்ளி மாணவி கடத்தப்பட்டார். வீட்டு முன் நின்றிருந்த மனைவியை பைக்கில் கடத்தி சென்ற ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவியின் உறவினர் ஈஸ்வர் அளித்த புகாரில் ஓட்டுனர் ஜெயகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. …       

 • நீலாங்கரை அருகே கத்தி முனையில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கடத்தல்
  Posted in: Uncategorized

  துரைப்பாக்கம்: நீலாங்கரையில் பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கத்தி முனையில் காரில் கடத்திய 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், நாலு மயில் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (35), பிரபல தொழிலதிபர். தற்போது அடையாறு, காந்தி நகரில் வசித்து வருகிறார். நீலாங்கரை பாண்டியன் சாலையில் புதிதாக சூப்பர் மார்க்கெட் ஒன்றை நேற்று முன்தினம் திறந்தார். இங்கு, ஜான்சி (25), இன்பா (35) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சூப்பர் மார்க்கெட்டை […]

 • நாட்டிலேயே முதல் முறையாக மும்பையில் ஒரு வீடு ரூ.160 கோடிக்கு விற்பனை
  Posted in: Uncategorized

  மும்பை: இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு தென் மும்பை, அல்ட்டாமவுன்ட் ரோடு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு வீடு ரூ.160 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. 10,000 சதுர அடி கொண்ட இந்த வீட்டை அல்பார்மா நிறுவனத்தை நடத்திவரும் ஜிண்டால் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். லோதா பில்டர்கள் தென் மும்பை, அல்ட்டாமவுன்ட் ரோட்டில் 40 மாடி கொண்ட சொகுசு கட்டிடத்தை கட்டி வருகின்றனர். 24வது மாடி வரை கட்டப்பட்டு விட்டது. கட்டிடம் முழுவதும் பூர்த்தியாக வரும் 2017ம் ஆண்டு ஏப்ரல் […]

 • நள்ளிரவில் கழுத்தை நெரித்து அர்ச்சகரை கொல்ல முயற்சி நித்யானந்தா சீடரிடம் விசாரணை
  Posted in: Uncategorized

  திருவாரூர்: திருவாரூர் மடப்புரத்தில் சோமநாதர் சுவாமி கோயில், அதை சார்ந்த மடம் உள்ளது. இக்கோயிலின் 5வது மடாதிபதியாக சுவாமி ஆத்மானந்தா இருந்து வருகிறார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அருணாச்சல ஞானதேசிக சுவாமிகள் மடம், சாதுக்கள் மடம் மற்றும் கரூர், சேலத்தில் கல்லூரிகளையும் ஆத்மானந்தா சுவாமி நடத்தி வருகிறார். சேலத்தில் கட்டப்பட்ட கல்லூரிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் நித்யானந்தா சுவாமியிடமிருந்து ரூ.2 கோடியை நன்கொடையாக ஆத்மானந்தா பெற்றதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து சோமநாதர் சுவாமி கோயில், […]

 • தோழியை பலாத்காரம் செய்த 4 மாணவர்கள் கைது : வாட்ஸ்அப்-ல் பரவியதால் பரபரப்பு
  Posted in: Uncategorized

  மும்பை : தோழியை பலாத்காரம் செய்த 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பலாத்கார கட்சி வாட்ஸ்அப்-ல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையை சேர்ந்தவர் ஷில்பா(15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பள்ளி மாணவி. இவரது தந்தை இறந்து விட்டார். தனது சித்தி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 8ம் தேதியன்று, ஷில்பாவுடன் படிக்கும் மாணவன் ஒருவன், ஷில்பாவை தன்னுடைய வீட்டுக்கு வருமாறு கூறினான். பாடத்தில் சந்தேகம் இருப்பதாக அவன் தெரிவித்ததை அடுத்து, ஷில்பா அங்கு சென்றார்.ஷில்பாவின் நண்பன், […]

 • திண்டுக்கல் அருகே லஞ்சம் வாங்கிய நிலஅளவையர் கைது
  Posted in: Uncategorized

  திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் லஞ்சம் வாங்கிய நில அலவையர் கைது செய்யப்பட்டார். பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்த விவசாயி அழகப்பனிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டார். விவசாயி அளித்த புகாரில் இளவரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். …       

 • தனியார் பங்களிப்புடன் ‘ரயில் நீர்’ உற்பத்திக்காக மேலும் 6 தொழிற்சாலை
  Posted in: Uncategorized

  சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக ரயில்வேயின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐஆர்சிடிசி) செங்கல்பட்டு அருகே பாலூரில் ரயில் நீர் தொழிற்சாலை அமைத்தது. பின்னர், ரயில் நிலையங்களில் தனியார் குடிநீர் பாட்டில் விற்பனை நிறுத்தப்பட்டது. பாலூரில் நாள் ஒன்றுக்கு 1.8 லட்சம் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. பாலூரை தொடர்ந்து பீகார் மாநிலம் தானாபாத், டெல்லி ஆகிய இடங்களில் ஐஆர்சிடிசியின் ரயில்நீர் தொழிற்சாலை அமைக்கப்பட்டன. விரைவில் மும்பை, பிலாஸ்பூரில் மேலும் 2 […]

 • தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 சரிவு
  Posted in: Uncategorized

  சென்னை : சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,402-க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.19,216-க்கும் விற்பனையாகிறது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.36.50-க்கும், பார்வெள்ளி மட்டும் கிலோவுக்கு ரூ.255 குறைந்து ரூ.34,090-க்கும் விற்பனையாகிறது. …